ஆலயம்:

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் பூநகரி நகரில் தம்பிராய் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அவரை வேண்டுவோருக்கு எல்லாம் வேண்டியதை அளித்து குறைதீர்க்கும் விநாயகராக அருள் பாலிக்கிறார். அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் சுயம்பு உருவத்தில் வளர்வது மக்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இங்கு ஸ்ரீ பைரவர், ஸ்ரீ ஐய்யனார் மற்றும் ஸ்ரீ முருகர் விக்கிரகங்களும் அமைந்துள்ளன.


ஆலயத்தின் சிறப்பு:

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையாரை நாடி வந்து வேண்டுவோருக்கு எல்லாம் வேண்டியதை அளித்தும்,அவர்களது குறைகளைத்தீ ர்த்து அருள்புரிவதே அவரின் முக்கிய சிறப்பாகும்.


விக்ரகங்கள்:

பொதுவாக விக்ரகங்களை கோவில்களின் மூலஸ்தனத்தில் காணலாம். உலோகத்தினால் செய்த விக்ரகங்களை வணங்குவதை விட கருங்கற்கலால் செய்த விக்ரகங்களை வணங்குபோது நாம் அதிக பலன் பெறமுடியும் ஏனெனில் சுயம்புகளின் (கற்களின்) வலிமை பல மடங்கு அதிகம்.எந்த சக்தியையும் தன் பக்கம் இழுக்கும் தன்மை சுயம்பிற்கு(கல்லிற்கு) மட்டும் உண்டு.இதில் நிலம்,நீர்,காற்று,நெருப்பு , ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் தன்மை விசேசமாக ஒழிந்திருந்து வெளிபடுவது போல்வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

விக்கிரக ஆராதனையின் நோக்கம் என்ன ?

ஒரு சிறிய பொருளில் அகில சிருஷ்டியையே உணர முயலும் வித்தையே விக்கிரக ஆராதனை. இது கற்பனை அல்ல. நிதரிசனமான, அனுபவத்தில் வந்த உண்மை. பிரம்மாண்டத்தில் உள்ளவை எல்லாம் ஒரு சிறிய விக்கிரகத்திலும், ஒவ்வொரு மண் திவலைகளிலும் அடங்கி இருக்கிறது. விக்ரக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைய முடியும். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஆழ்வார்கள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றோர் விக்ரக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைந்துள்ளனர்.

விநாயகரின் அதிசயபாடல்:

விநாயகர் பஞ்சரத்ன ஸ்தோத்திரம்:

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார்

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையாரின் குடமுழுக்கு விழா நடைப்பெற உள்ளதால் தாங்களும் தாங்களின் சுற்றத்தாறும் கலந்து கொண்டு தியாகத்து சுயம்புப் பிள்ளையாரின் ஆருளை பெருமாறு இதயம் கனிந்து வேண்டி கொள்கிறோம்.