தியாகத்து விநாயகர் பூநகரி கோவில் தங்களை அன்புடன் வரவேற்கிறது !!!

தியாகத்து சுயம்புப் பிள்ளையார் ஆலயம்:

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் நூறாண்டுகளுக்கும் முன்பு, தம்பிராய் என்னும் அழகிய கிராமத்தில் எழுந்தருளி வேண்டுவோர் அனைவருக்கும் எல்லா வளங்களையும், நலன்களையும் வழங்கி வருகிறார். தியாகத்து சுயம்புப் பிள்ளையார், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ நாகதம்பிரான், ஸ்ரீ ஐய்யனார் ஆகியோரின் விக்ரகங்களும் அமைந்துள்ளன. அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் சுயம்பு உருவத்தில் வளர்வது மிகுந்த ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆலயம் எழந்தருளியிருக்கும் இடம்:

யாழ்பாணம் மாகணத்தில் பூநகரி எனும் அழகிய நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பூநகரி நகரத்திற்கு அருகில் இருப்பவை தியாகம் மற்றும் தம்பிராய் ஆகிய சிறு கிராமங்கள் ஆகும். இக்கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்ற சுயம்பு வடிவ விநாயகருக்கு ஆலயம் 2013 ஆம் ஆண்டு கட்டப்பட்டு குடமுழுக்கு விழா 10.07.2013 அன்று நடைபெறவுள்ளது. அன்பு இதயம் கொண்ட உள்ளங்கள் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு ஆண்டவனின் அருளைப் பெற அன்போடு அழைக்கிறோம்.

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார்

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையாரின் குடமுழுக்கு விழா நடைப்பெற உள்ளதால் தாங்களும் தாங்களின் சுற்றத்தாறும் கலந்து கொண்டு தியாகத்து சுயம்புப் பிள்ளையாரின் ஆருளை பெருமாறு இதயம் கனிந்து வேண்டி கொள்கிறோம்.

ஆலயத்தின் முகப்பு
சுயம்புப் பிள்ளையார்
ஆலயம்

ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் ஆலயத்தில் வருகிற புதன் கிழமை , 01-01-2014 அன்று ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம் நடைபெற உள்ளதால் தாங்களும் தாங்கள் சுற்றத்தாறும் இந்த பூஜையில் கலந்து கொண்டு கடவுளின் அருளை பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமத்தை செய்வதின் மூலம் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து சகல வசதிகளுடன் வாழ்வர் .

பிள்ளையாரின் பாடல்கள்:


கந்தபுராணம்

மண்ணுலகத்தினிற் பிறவிமாசற
எண்ணிய பொருள் எல்லாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையோர் களிற்றுமாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.

திருக்கடைக்காப்பு

பிடியதனுருவுமை கௌமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்
கடி கணபதிவர அருளினன் முகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.

ஆனைமுகன் திருமந்திரம்

ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பெருந்தேவனார்

ஓதவினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்
காதற் பொருள் அனைத்தும் கைகூடும் – சீதப்
பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்
தனிக் கோட்டு வாரணத்தின் தாள்!